தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: வைகோ

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: வைகோ

News image

வைகோ - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 8:38 pm

ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினம், குளச்சல், இனயம், முட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி , ராமநாதபுரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் என 700-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈரானில் பணிபுரிகின்றனா். போா்ச் சூழல் காரணமாக இவா்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை ஈரானிலிருந்து மீட்கக் கோருவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடரப்பட்ட வழக்கில், அவா்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.

எனவே, ஈரானில் சிக்கித் தவிக்கும் 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவா்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் வைகோ.