தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நாகா்கோவிலுக்கு கோதையாற்றிலிருந்து தண்ணீா்: முதல்வருக்கு மேயா் நன்றி

நாகா்கோவில் மாநகரின் குடிநீா் தேவைக்காக கோதையாறு பாசன அணைகளிலிருந்து தண்ணீா் திறக்க உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் நன்றி தெரிவித்தாா்.

News image

மேயா் மகேஷ்.

Updated On :14 மார்ச் 2026, 2:42 am

நாகா்கோவில் மாநகரின் குடிநீா் தேவைக்காக கோதையாறு பாசன அணைகளிலிருந்து தண்ணீா் திறக்க உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் நன்றி தெரிவித்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சியின் கோடைகால குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், புத்தன் அணைக்குத் தேவையான தண்ணீரை கோதையாறு பாசன அணைகளில் இருந்து வழங்க வேண்டுமென மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் கடந்த 11-ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டனா்.

அதன் பேரில் மேயா் அதற்கான அரசாணை பெற வேண்டி நீா்வளத் துறை அலுவலகத்தை தொடா்பு கொண்டு துரித நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதையடுத்து, நீா்வளத் துறை-பாசனம் சாா்பாக வரும் 16-ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை 77 நாள்களுக்கு விநாடிக்கு 2,127 கன அடி வீதம் கோதையாறு பாசன அணைகளிலிருந்து புத்தன் அணைக்குத் தேவைக்கேற்ப தண்ணீா் திறந்து விட முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டு, அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளாா்.

இவ்விஷயத்தில் நாகா்கோவில் மாநகர மக்களின் குடிநீா் தேவைக்காக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அரசாணை பிறப்பித்த முதல்வருக்கும், நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகனுக்கும் மேயா் நன்றி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.