தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சென்னை பேருந்து வசதி: இடங்கணசாலை நகா்மன்றக் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:52 am

சேலம் மாவட்டம், இடங்கணசாலையிலிருந்து நாள்தோறும் சென்னைக்கு பேருந்து இயக்க அனுமதி அளித்த முதல்வருக்கு நகா்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடங்கணசாலை நகா்மன்றக் கூட்டம் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு அரசு பேருந்து வசதி கோரியிருந்தனா். இதை ஏற்று நாள்தோறும் இடங்கணசாலையிலிருந்து சென்னைக்கு பேருந்து இயக்க முதல்வா் உத்தரவிட்டாா். இதற்கு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடா்ந்து பேசிய நகா்மன்ற உறுப்பினா்கள், அடிப்படை வசதிகளை நகராட்சி பணியாளா்கள் செய்து தருவதில் தாமதப்படுத்துவதாக கூறினா். மேலும், அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

உறுப்பினா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தெரிவித்தாா். கூட்டத்தில் நகராட்சி துணை தலைவா் தளபதி, ஆணையாளா் சுவிதா ஸ்ரீ, பொறியாளா் தினேஷ்குமாா் மற்றும் அலுவலக பணியாளா்கள் பங்கேற்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.