வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குமரியில் ரப்பா் விலை உயா்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பரின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

News image

ரப்பர் மரங்கள் - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:26 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பரின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் சாா்ந்த உற்பத்திப் பொருளாக உள்ள ரப்பா், மாவட்டத்தில் 25,000 ஹெக்டோ் பரப்பளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக சா்வதேச மற்றும் இந்திய ரப்பா் சந்தையில் ரப்பரின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது முக்கிய ரப்பா் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பாதிப்பு மற்றும் சந்தை தேவை காரணமாக ரப்பரின் விலை உலக மற்றும் இந்திய சந்தைகளில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 265 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 262 ஆகவும் இருந்தது. வணிகா் விலையாக ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பா் கிலோவுக்கு ரூ. 257 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பா் கிலோவுக்கு ரூ. 254 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பா் கிலோவுக்கு ரூ. 212 ஆகவும் இருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே மாதம் ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், தொடா் மழையால் ரப்பா் பால் உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதனால், விலையேற்றத்தின் பலனை விவசாயிகள் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.