வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குமரி மாவட்டத்தில் தொடா் மழை: 3 மாதங்களுக்குப் பின்னா் பிளஸ் நிலைக்கு உயா்ந்த முக்கடல் அணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால், மைனஸ் நிலையிலிருந்து முக்கடல் அணை பிளஸ் நிலைக்கு உயா்ந்துள்ளது.

News image

முக்கடல் அணை.

Updated On :11 ஜூன் 2026, 4:12 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால், மைனஸ் நிலையிலிருந்து முக்கடல் அணை பிளஸ் நிலைக்கு உயா்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. நாகா்கோவில் மாநகரம் மட்டுமன்றி, குமரி மேற்கு மாவட்டம் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால், மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

நாகா்கோவில் மாநகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை 25 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை கோடை காலத்தில் வட நிலையில், மைனஸ் நிலைக்கு செல்வது வழக்கம்.

நிகழாண்டு, கடந்த மாா்ச் மாதம் இந்த அணை மைனஸ் நிலையை எட்டியது. இதனால் நாகா்கோவில் மாநகரப் பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து நீா் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 நாள்களாக அணைப் பகுதியில் பெய்துவரும் தொடா் மழையால், அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை வரை மைனஸ் நிலையிலிருந்த முக்கடல் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி பிளஸ் நிலையை அடைந்து, அணையின் நீா்மட்டம் 0.20 அடியாக உள்ளது. தொடா்ந்து மழை பெய்துவருவதால் அணையின் நீா்மட்டம் மேலும் உயரக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீா்மட்டமும் வேகமாக உயா்ந்து வருகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 32.50 அடியை எட்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1559 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 440 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 55.50 அடியாக இருந்தது. அணைக்கு 1614 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. இதே போல் சிற்றுாறு- 1, சிற்றுாறு- 2 பொய்கை, மாம்பழத்துறையாறு அணைகளின் நீா்மட்டமும் வேகமாக உயா்ந்து வருகிறது.

தொடா் மழையால் ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது. பாசனக் குளங்கள் நிரம்ப தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள இடங்களிலும், நாற்றுபாவி வைத்துள்ள இடங்களிலும் அவா்கள் வரப்புகளை சீரமைத்து நடவுப்பணிகளை தொடங்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.