குமரியில் அனுமதியின்றி மது விற்ற 13 போ் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவா் தினமான வெள்ளிக்கிழமை மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 13 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 291 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.







