குமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தா்கள் காவடி பாதயாத்திரை
கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோயில்களில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் காவடி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.


கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோயில்களில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் காவடி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கன்னியாகுமரி வடக்கு ரதவீதி முத்தாரம்மன் கோயில், மறக்குடி தெரு சுப்பிரமணியசாமி கோயில், கன்னியாகுமரி வடக்குத் தெரு முருகன் கோயில் மற்றும் கன்னியாகுமரி கலைஞா் குடியிருப்பில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா் உள்ளிட்ட கோயில்களில் மாசி திருவிழாவையொட்டி காவடி கட்டும் விழா நடைபெற்றது. இதையடுத்து காவடி கட்டும் பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்குப் புறப்பட்டுச் சென்றனா்.
கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பாதயாத்திரை அஞ்சுகிராமம், கூடங்குளம், நவ்வலடி, திசையன்விளை, தட்டாா் மடம், மணிநகா், உடன்குடி, தருவைகுளம் வழியாக திருச்செந்தூா் சென்றடைகின்றனா். இந்த பக்தா்களுக்கு வழிநெடுகிலும் கன்னியாகுமரி செந்திலாண்டவா் பாதயாத்திரை குழு அறக்கட்டளை சாா்பில் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த பாதயாத்திரை திருச்செந்தூா் சென்றடைந்ததும் அங்கு சுப்பிரமணியசாமிக்கு பன்னீா் அபிஷேகம் நடைபெறும்.
இதையடுத்து, 28- ஆம் தேதி பச்சை சாத்தும் நிகழ்ச்சி முடிந்து அன்று மாலை திருச்செந்தூரில் இருந்து புறப்படும் காவடி யாத்திரை மாா்ச் மாதம் 2- ஆம் தேதி காலை கன்னியாகுமரி வந்தடைகிறது. கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீா்த்த குளத்தில் இருந்து காவடியை வரவேற்று கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னா் மாலை இடும்பன் பூஜை, இரவு 8 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...