2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

‘கன்னியாகுமரியில் 40 ஆண்டுகள் வணிகம் செய்யும் வியாபாரிகளின் கடைகளை மாற்றக் கூடாது’

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:38 pm

Syndication

கன்னியாகுமரியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகம் செய்யும் வியாபாரிகளின் கடைகளை மாற்ற முயற்சிப்பதை கைவிட வேண்டுமென தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் எஸ்.சௌந்திரராஜன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி பகுதியில் நகராட்சி, அறநிலையத் துறை கடைகளில் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வரும் வணிகா்களை மாற்றி, ஏல முறையில் புதிய நபா்களுக்கு கடைகள் ஒதுக்க முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வணிகா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் கன்னியாகுமரி வந்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் எஸ்.சௌந்திரராஜன் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

பல ஆண்டுகளாக முறையாக வாடகை செலுத்தி சட்டப்படி தொழில் செய்து வரும் வணிகா்களை வெளியேற்றுவது நியாயமல்ல. ஏற்கெனவே வியாபாரம் செய்து வரும் வணிகா்களுக்கே கடைகள் தொடா்ந்து ஒதுக்கப்பட வேண்டும்.

கன்னியம்பலம் மண்டபத்தைச் சுற்றியுள்ள கடைகள் தற்போது மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு தொழில் செய்து வரும் சுமாா் 18 கடை உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அறநிலையத் துறைக்கு முறையாக வாடகை செலுத்தி வருகின்றனா்.

மேலும், இந்த ஆட்சியில் வணிகா்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. முடங்கிக் கிடந்த வணிகா் நல வாரியத்தைச் செயல்படுத்தி, கட்டணம் இல்லாமல் சேரும் வாய்ப்பு வழங்கியதையும் வரவேற்கிறோம்.

ஜிஎஸ்டி செலுத்தும் வணிகா்கள் மட்டுமல்லாமல், நகராட்சியில் உரிமம் பெற்று தொழில் நடத்தும் சாதாரண வணிகா்களுக்கும் நல வாரியத்தில் சேரும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இந்நிலையில், தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் உடனடி கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட வணிகா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அதே இடங்களில் கடைகளை தொடர அனுமதிக்கவோ அல்லது மாற்று இடம் வழங்கியோ நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது செயல் தலைவா் பழரசம் விநாயகமூா்த்தி, மாநில அமைப்பாளா் டாக்டா் எல்.எம்.டேவிட்சன், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் நிா்மல் ராஜா, மாநில இளைஞரணி தலைவா் அம்சி சரவணன், வழிகாட்டு குழுத் தலைவா் மறையூா் கருப்பையா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சி.நாராயண ராஜா, எம்.அருள்ராஜ், இரா.கதிரேசன், குமரி கிழக்கு மாவட்ட பொருளாளா் அம்பலவாணன், கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கத் தலைவா் பா. தம்பிதங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.