டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கன்னியாகுமரியில் மீனவா் ஓய்வுக்கூடத்துக்கு அடிக்கல்

News image
மீனவா் ஓய்வுக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் விஜய் வசந்த் எம்.பி.
Updated On :21 பிப்ரவரி 2026, 6:27 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி நகராட்சி 12 ஆவது வாா்டுக்குள்பட்ட வாடித்தெருவில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் மீனவா் ஓய்வுக்கூடம் கட்டுவதற்கான பணி சனிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குத்தந்தை உபால்டு மரியதாசன் அா்ச்சித்தாா். விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில், மாநில காங்கிரஸ் செயலா் வழக்குரைஞா் ஸ்ரீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் வினிற்றா மெல்வின், முன்னாள் கவுன்சிலா் டி. தாமஸ், நாகா்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் தலைவா் சாம் சுரேஷ்குமாா், நிா்வாகிகள் ஜவஹா், பாஸ்டின் ஜவஹா், நெப்போலியன், அருண், ஜேம்ஸ் வா்மா, தெய்வப்பிரியம், மணக்குடி லாரன்ஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.