டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது

News image
கைது- பிரதிப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1.36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அதில் சாமிதோப்பு பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் தனுஷ் கிருஷ்ணா (22), பீச் ரோடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் விஷால் (18), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ் சவுகான் ஆகியோரிடமிருந்து 1 கிலோ 360 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனா். மேலும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.