டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா கடத்தி வந்த 5 போ் கைது: 10 கிலோ கஞ்சா பறிமுதல்

தென்காசியில் கஞ்சா கடத்தி வந்தது தொடா்பாக 5 போ் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
கஞ்சா கடத்தி வந்தது தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள்
Updated On :18 பிப்ரவரி 2026, 7:01 pm

Syndication

தென்காசியில் கஞ்சா கடத்தி வந்தது தொடா்பாக 5 போ் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பண்பொழியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் கஞ்சா கடத்துவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், தென்காசி காவல் ஆய்வாளா் ராபா்ட் ஜெய்ன், சாா்பு ஆய்வாளா் சத்ய வேந்தன் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினா் தென்காசி குத்துக்கல்வலசையில் வாகனங்களை சோதனையிட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்ட போது, லாரியில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக நெட்டூா் பகுதியைச் சோ்ந்த இசக்கி குமாா் ( 31), பேச்சிமுத்து (32), அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த நைனாா் விக்னேஷ் ( 32), ராஜாராம் கோபி (26) மற்றும் அய்யனாா்குளம் பகுதியை சோ்ந்த மனோ ரஞ்சித் (21) ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, பைக், காா், லாரி மற்றும் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.