குழித்துறை அருகே அனுமதிச் சீட்டுக்கு புறம்பாக எம்.சான்ட் கொண்டு சென்ற 2 கனரக லாரிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா், குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக அடுத்தடுத்து வந்த 2 கனரக லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில் எம்.சான்ட் இருந்தது தெரிய வந்தது. அவற்றுக்கான ஆவணங்களை சரிபாா்த்தபோது, ஆற்றூா் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக அனுமதிச் சீட்டு பெற்று, அவற்றை குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதிக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
தொடா்ந்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா்களான காட்டுவிளை ஜூலியஸ் ரெஜின், ஆற்றூா் கோணம் பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் ஆகியோரை கைது செய்தனா். தொடா்ந்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


