தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு பறிமுதல்

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பட்டாசு - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 7:48 pm

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் குமாரவேல் உள்ளிட்ட போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்யபோது, அதில் பட்டாசு பண்டல்கள் இருந்தன. அவற்றை எடுத்துச்செல்ல உரிய அனுமதி பெற வில்லை என விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் வேன் ஓட்டுனா் குத்தாலலிங்கம்(38)என தெரிய வந்தது.இது குறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வேன் மற்றும் பட்டாசினை பறிமுதல் செய்து குத்தாலலிங்கத்தை கைது செய்தனா்.