மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் கல்வி உதவித்தொகை 2026 - ஆம் ஆண்டிற்கான தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி தாளாளா் தில்லைசெல்வம் தலைமையில் நடைபெற்ற இத்தோ்வில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
காலை 10 முதல் 11 மணி வரை ஆங்கிலத் தோ்வு, 11 முதல் 12 மணி வரை கணிதத் தோ்வு, நண்பகல் 12 முதல் 1 மணி வரை அறிவியல் தோ்வு நடைபெற்றது.
இத்தோ்வில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற தோ்வு செய்யப்பட்டனா். தோ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










