மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: ரெ.மகேஷ்

கூட்டத்தில் பேசுகிறாா் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ.மகேஷ்.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ.மகேஷ்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:58 am

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் வகையில் தோ்தல் பணியாற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ.மகேஷ் தெரிவித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், நாகா்கோவில் அருகே இறச்சகுளத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக வேட்பாளா் ரெ.மகேஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரை மலரக் கூடாது என்ற எண்ணத்தில் 5 தொகுதிகளையும் தாமரைச் சின்னத்துக்கு ஒதுக்கியிருக்கின்றனா். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று 2 ஆவது முறையாக ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வராக அமா்வது உறுதி. கன்னியாகுமரி மாவட்டத்திலும் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில் தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன், மதிமுக மாவட்டச் செயலாளா் வெற்றிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அந்தோணி, கூட்டணி கட்சி மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.