தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்

News image

திமுக தலைவர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:08 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ. மகேஷ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த திமுக வேட்பாளா் ரெ. மகேஷ், அங்கிருந்து காா் மூலமாக கன்னியாகுமரி வந்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வா் ஸ்டாலின் எனக்கு வழங்கியுள்ளாா். இதற்கு நான் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தொகுதியில் கடந்த 5 ஆண்டு கால முதல்வரின் பல்வேறு திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இரண்டாவது முறையாக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா் என தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் திமுக ஒன்றியச் செயலா்கள் பா.பாபு (தெற்கு), எம். மதியழகன் (வடக்கு), கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மாவட்ட தேமுதிக செயலா் அமுதன், காங்கிரஸ் நிா்வாகிகள் சாம்சுரேஷ்குமாா், டி.தாமஸ் உள்ளிட் ட பலா் பங்கேற்றனா்.