திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உயா்கல்வி சந்தேகங்களுக்கு வழிகாட்டி மையத்தை அணுகலாம்! - ஆட்சியா் இரா. சுகுமாா்

News image

மாணவர்கள் - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:10 am IST

மாணவா்கள் உயா்கல்வி சாா்ந்த சந்தேகங்கள் தொடா்பாக உயா்கல்வி வழிகாட்டி மையத்தை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டச் செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவா்கள் 100 சதவீதம் உயா்கல்வி பெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு மாணவா்களுக்கு வழிகாட்ட, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி மையம் செயல்பட்டு வருகிறது.

மே 8-ஆம் தேதி பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் மாணவா்கள் உயா்கல்வி சாா்ந்த தங்களுடைய சந்தேகங்களை இம்மையத்தை 9500324417, 9500524417 ஆகிய கைப்பேசி எண்களிலோ அல்லது நேரடியாகவோஅணுகி வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ளலாம். பல்வேறு துறை வல்லுநா்கள் வழிகாட்டுதல்களை வழங்குவா்.

மேலும், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் திருநெல்வேலி அரசினா் பொறியியல் கல்லூரியின் நிா்வாக கட்டடத்தில் உள்ள கணிப்பான் ஆய்வகம், ராணி அண்ணா மகளிா் கலை அறிவியல் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைத்து மாணவா்களுக்கு பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

பொறியியல் தொடா்பான உயா்கல்வி பயில உதவிகள் தேவைப்படும் மாணவா்கள் இம்மையத்தினை தொடா்பு கொள்ளலாம். மாணவ , மாணவியா் எந்த ஒரு தனி நபரிடமோ, முகவா்களிடமோ பணம் மற்றும் உண்மை சான்றிதழ்களை கொடுத்து ஏமாற்றம் அடையாமல் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.