மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியைப் பெறுவதற்கு இப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ச. மாணிக்கம், தொலைநெறி தொடர்கல்வி இயக்கக இயக்குநர் (பொறுப்பு) கா. மணிக்குமார், தகவல் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் என். கிருஷ்ணன், புவி தொழில்நுட்ப மையத்தின் தலைவர் என். சந்திரசேகரன், இப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை இயக்குநருமான பி. செல்லத்துரை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பதிவாளர் சண்முகையா, சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் தாண்டவன் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்களில் கூறப்படுகிறது.