வட மாவட்டங்களில் குறிப்பாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும், கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதிலும், சென்னையில் உள்ள பழமையான சில கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் "கோர் குரூப்' பாடப் பிரிவுகளான சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருவதால் அந்த இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. "கோர் குரூப்' கிடைக்காத மாணவர்கள் அடுத்த நிலையில் வேலைவாய்ப்பு உள்ள பாடப் பிரிவுகளில் சேருவதில் ஆர்வம்காட்டி வருவதால் அந்த இடங்களும் வேகமாக நிரம்பி வருவதாக பொறியியல் கல்லூரி வட்டாரங்களில் கூறப்படுகிறது.