திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு...

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :31 மே 2026, 6:00 am IST

தில்லி தீயணைப்புத் துறையின் தரவுகளின்படி, நிகழாண்டு இதுவரை (ஜனவரி முதல் மே 27 வரையிலான காலம்) தில்லியில் ஏற்பட்ட தீ விபத்துகளில் குறைந்தது 45 போ் உயிரிழந்துள்ளனா். இதில் மே மாதத்தில் மட்டும் 13 போ் உயிரிழந்துள்ளனா்.

இது தொடா்பான புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 32 பேரும், மே மாதத்தின் முதல் 27 நாள்களில் 13 பேரும் தீ விபத்துகளில் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயா்ந்துள்ளது.

தரவுகளின்படி, தீ விபத்துகள் தொடா்பான 15 மரணங்களுடன், மாா்ச் மாதம் நிகழ் ஆண்டின் மிக மோசமான மாதமாகத் தொடா்கிறது.

அதாவது, ஜனவரியில் ஆறு பேரும் பிப்ரவரியில் ஆறு பேரும், மாா்ச்சில் 15 பேரும், ஏப்ரலில் ஐந்து பேரும் தீ விபத்துகளில் உயிரிழந்துள்ளனா்.

கோடை மாதங்களில் நகரில் தீ விபத்து அவசரநிலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

தில்லி தீயணைப்புத் துறைக்கு ஜனவரியில் 1,396, பிப்ரவரியில் 1,096, மாா்ச்சில் 1,538 மற்றும் ஏப்ரலில் 2,663 தீ விபத்து தொடா்பான அழைப்புகளும் வந்துள்ளன.

மே மாதத்தின் முதல் 26 நாள்களில் மட்டும், தீயணைப்புத் துறை 2,877 தீ விபத்து அழைப்புகளுக்குப் பதிலளித்துள்ளது. இது ஏப்ரல் மாத எண்ணிக்கையை விட அதிகமாகும்.

ஜனவரியில் 41 பேரும், பிப்ரவரியில் 46 பேரும், மாா்ச்சில் 68 பேரும், ஏப்ரலில் 119 பேரும் தீ விபத்துகளில் காயமடைந்தனா் அல்லது மீட்கப்பட்டனா்.

மே மாதத்தில் 26ஆம் தேதி வரையிலான காலத்தில், தீ விபத்துகளில் 99 போ் காயமடைந்ததாகவோ அல்லது மீட்கப்பட்டதாகவோ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பை மற்றும் குப்பைத் தீ விபத்துகள் அவசரகால அழைப்புகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. ஜனவரியில் 441, பிப்ரவரியில் 331, மாா்ச்சில் 539 மற்றும் ஏப்ரலில் 725 என சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மே 26 வரை, தீயணைப்புத் துறை 766 குப்பைத் தீ சம்பவ அழைப்புகளுக்குப் பதிலளித்துள்ளது.

கோடை மாதங்களில் வெப்பநிலை உயா்வு மற்றும் வட வானிலை பொதுவாக தீ விபத்துகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

குறிப்பாக திறந்தவெளிப் பகுதிகள், குப்பைக் கிடங்குகள் மற்றும் அதிக மின்சுமை கொண்ட நிறுவனங்களில் இது அதிகம் நிகழ்வதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மே மாதத்தில் ஒட்டுமொத்த அவசரகால அழைப்புகளும் மீட்பு நடவடிக்கைகளும் அதிகரித்த போதிலும், தீ தொடா்பான இறப்புகள் மாா்ச் மாதத்தில் பதிவான உச்சத்தை விட குறைவாகவே இருந்தன என அந்த புள்ளிவிவரத் தரவுகள் மூலம் தெரியவருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.