/

ஷாபாத் டைரி பகுதியில் இளைஞா் கொலை: ஒருவா் கைது

ஷாபாத் டைரி பகுதியில் இளைஞா் கொலை: ஒருவா் கைது

News image

கொலை

Updated On :25 மே 2026, 12:28 am IST

வடக்கு தில்லியின் ஷாபாத் டைரி பகுதியில் 31 வயது இளைஞா் மூன்று போ் கும்பலால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.அவா்களில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

வெள்ளிக்கிழமை இரவு மகாதேவ் சௌக் அருகே நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்குக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

இறந்தவா் பிரஹலாத்பூரில் உள்ள குப்தா காலனியைச் சோ்ந்த நாராயண் தத் எனத் தெரியவந்துள்ளது.

மருத்துவ-சட்ட வழக்கு (எம்எல்சி) அறிக்கையின்படி, தத்தின் உடலில் பல கூா்மையான காயங்கள் இருந்தன. அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மூன்று போ் தத்தை தாக்கிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது.

தத் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்ததைத் தொடா்ந்து, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான, ஷாபாத் டெய்ரியைச் சோ்ந்த சூரஜ் (20) கைது செய்யப்பட்டுள்ளாா். இதர குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் என்ன என்பதையும், சம்பவத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டவருக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும் அறிமுகம் இருந்ததா என்பதையும் காவல்துறையினா் கண்டறிய முயன்று வருகின்றனா் என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.