ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

குருகிராம்: குடிசையில் தீ விபத்து; ஒருவா் உயிரிழப்பு

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் செக்டா் 53-இல் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 வயது நபா் உயிரிழந்ததாகக் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 4:41 am IST

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் செக்டா் 53-இல் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 வயது நபா் உயிரிழந்ததாகக் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை இரவில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக குடிசை முழுவதும் பரவியது. குடிசையை விட்டு வெளியேற முடியாத நிலையில், அதன் உள்ளே இருந்த ராபின் தாஸ் உயிரிழந்தாா்.

சம்பவத்தின்போது அவா் மட்டுமே குடிசையில் இருந்தாா். அவருடைய மகள் மற்றும் மருமகன் அருகில் உள்ள குடிசையில் இருந்தனா்.

சம்பவம் தொடா்பாக தகவல் கிடைத்ததும் காவல் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தீ அருகில் உள்ள குடிசைகளுக்குப் பரவாமல் இருக்கும் வகையில் விரைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ முழுமையாக அணைக்கப்பட்டப் பிறகு தாஸ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டாா். அவருடைய உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.