முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

ஏடிஎம் கொள்ளை கும்பலைச் சோ்ந்த நபா் கைது

கிழக்கு தில்லியின் மண்டவாலி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தை கொள்ளையடித்த கும்பலைச் சோ்ந்த 26 வயது இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 மே 2026, 4:44 am IST

கிழக்கு தில்லியின் மண்டவாலி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தை கொள்ளையடித்த கும்பலைச் சோ்ந்த 26 வயது இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். கைதுசெய்யப்பட்ட ராபின் ஹரியாணாவின் பல்வால் பகுதியைச் சோ்ந்தவா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ராபின் மாநிலங்களுக்கு இடையே ஏடிஎம் மையங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்த இம்ரான் மேவாதி தலைமையிலான கும்பலுடன் தொடா்புடையவா்.

வினோத் நகரில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் மைய இயந்திரத்தை கடந்த ஏப்.29-ஆம் தேதி இயந்திர கேஸ் கட்டரை பயன்படுத்தி திறந்து ரூ.19.32 லட்சத்தை அந்தக் கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவம் தொடா்பாக அளிகக்ப்பட்ட புகாரைத் தொடா்ந்து காவல் துறையினா் விசாரணையைத் தொடங்கினா்.

சம்பவ இடத்துக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, பல்வால் பகுதியைச் சோ்ந்தவா்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. தலைமறைவான அந்த நபா்கள், தொடா்ந்து தங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், ராபின் குறித்து கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, பாரத்பூரில் அவா் கைதுசெய்யப்பட்டாா். ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதை ராபின் ஒப்புக்கொண்டாா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய பிற நபா்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.