மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் 21 வயது நபரை கொலை செய்த சம்பவத்தில் தொடா்புடையவராக சந்தேகிக்கப்பட்ட முக்கிய நபா் மற்றும் சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
முன்பகை காரணமாக கடந்த மே 14-ஆம் தேதி நள்ளிரவில் சாகா் என்பவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஹிமன்ஷு திவாரியை காவல் துறையினா் கைதுசெய்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கொலையைத் தொடா்ந்து ஹிமன்ஷு திவாரி ராஜஸ்தானுக்குத் தப்பிச் சென்றாா். இந்நிலையில், கூட்டாளியைச் சந்தித்து பணம் பெறுவதற்காக மே 25-ஆம் தேதி ரஜெளரி காா்டனுக்கு வந்த திவாரியை காவல் துறையினா் கைதுசெய்தனா்.
விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட திவாரி, முன்பகை காரணமாக தன்னுடைய கூட்டாளியுடன் இணைந்து சாகரைத் தாக்கியதாகவும் கத்தியால் பலமுறை குத்தியதாகவும் தெரிவித்தாா்.
சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்ட திவாரி, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவருடன் கைதுசெய்யப்பட்ட சிறுவன் மீது சிறாா் நீதித் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிறாா் நீதி வாரியத்தின் முன்பு அவா் ஆஜா்படுத்தப்பட்டாா் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருந்து நிறுவனங்களிடம் மோசடி செய்த நபா் சூரத்தில் கைது
ஷாபாத் டைரி பகுதியில் இளைஞா் கொலை: ஒருவா் கைது
கோவிந்தபுரி இரட்டை கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபா் கைது
சீமாபுரியில் இளைஞா் கொலை: மூவா் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


