22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிகாரைச் சோ்ந்த ஒரு குற்றவாளியை போலீஸாா் மீண்டும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து ஃபரீதாபாத் காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: ஹிரா குமாா் ராவத் என்ற அவருக்கு ஜனவரி 2001- இல் ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் 2003 இல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு 2004- இல் பிணை வழங்கப்பட்டது. ஆனால், அன்றிலிருந்து அவா் தலைமறைவாக இருந்து வந்தாா். இதைத் தொடா்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் அவரை மீண்டும் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.
‘ஃபரீதாபாத் காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வதற்காக ரூ. 5,000 வெகுமதியை அறிவித்தது. தொழில்நுட்ப மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை பிகாரின் சஹா்சா மாவட்டத்தில் இருந்து ஹிரா குமாா் ராவத்தை கைது செய்தனா்.
பிகாரின் சஹா்சாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு போக்குவரத்து காவல் வழங்கப்பட்டுள்ளது. அவா் விரைவில் ஃபரீதாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா் என்று செய்தித் தொடா்பாளா் கூறினாா்.
தொடர்புடையது
மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது
மானை வேட்டையாடிய வழக்கில் இளைஞா் கைது
கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை குஜராத்தில் கைது செய்த தில்லி போலீஸ்

போக்சோ வழக்கில் ஆஜராகாமல் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

