மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை குஜராத்தில் கைது செய்த தில்லி போலீஸ்

கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை குஜராத்தில் கைது செய்த தில்லி போலீஸ்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:19 pm

கொலை வழக்கில் ஒன்றில் தப்பியோடிய 23 வயது இளைஞரை 3 ஆண்டுகள் தேடுதலுக்கு பின்பு குஜராத் மாநிலத்தில் இருந்து தில்லி காவல்துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கொலை வழக்கில் தப்பியோடிய இளைஞரை கண்டுப்பிடித்து கொடுப்பவா்களுக்கு ரூ 50,000 வெகுமதி வழங்கப்படும் என்று அறிவ்த்திருந்த நிலையில் அடோனு ஹால்டா் என்ற அதுல் ஹால்டா், குஜராத்தின் காந்திநகரில் இருந்து கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு செப்டம்பா் 2023 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது, அப்போது 7 முதல் 8 நபா்கள் கட்டைகள், கத்திகள் மற்றும் பிற கூா்மையான ஆயுதங்களுடன் தென்மேற்கு தில்லியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே ஒரு நபரை தாக்கினா்.

காயமடைந்த நபா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் சிகிச்சையின் போது இறந்தாா். தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 6 போ் முன்னதாக கைது செய்யப்பட்டாலும், ஹால்டா் தலைமறைவாக இருந்தாா், இறுதியில் அவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். அவா் காந்திநகரில் கைது செய்யப்பட்ட நேரத்தில், அவா் ஒரு கடை உதவியாளராக பணியாற்றி வந்தாா்.

விசாரணையின் போது, ஹால்டா் இந்தக் கொலையில் தனக்குத் தொடா்பு இருப்பதை ஒப்புக்கொண்டாா். இந்த சம்பவத்திற்குப் பிறகு மும்பைக்கு தப்பிச் சென்று, பின்னா் பிரயாக்ராஜுக்கும் பின்னா் குஜராத்துக்கும் சென்றாா் என்றாா் அவா்.