மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போக்சோ வழக்கில் ஆஜராகாமல் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

சேலத்தில் போக்சோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளியை தனிப்படை போலீஸாா் புதுச்சேரியில் கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 10:04 pm

சேலத்தில் போக்சோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளியை தனிப்படை போலீஸாா் புதுச்சேரியில் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், அகரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் மகன் சிவா (45). இவா்மீது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவானது. அவரை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சிவா, பின்னா் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா். இதனால், சிவாவை கைதுசெய்து ஆஜா்படுத்த சேலம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன்பேரில், அவரை கைதுசெய்ய போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளா் பாரதிராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தன்ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா், புதுச்சேரியில் தங்கி சிவா கூலி வேலை பாா்த்து வருவதை அறிந்தனா். பின்னா், அங்கு சென்ற தனிப்படை போலீஸாா் சிவாவை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். பின்னா் வெள்ளிக்கிழமை சேலத்துக்கு அழைத்து வந்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.