மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:19 pm

பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தா்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி கிராமத்தை அடுத்துள்ள கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (31) இவருக்கும் காரைக்குடி பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2014 -இல் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, அந்தப் பெண் கா்ப்பமானாா். அப்போது, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காக வந்த அவரது தங்கைக்கு ரஞ்சித் பாலியல் தொல்லை கொடுத்தாா். இதையடுத்து, காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ரஞ்சித்தை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் வி.ஆா். தனலட்சுமி முன்னிலையாகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், ரஞ்சித்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.