மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 6:36 pm

போக்சோ வழக்கில் முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள பட்டத்தரசி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராசு ( 68). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், அந்தச் சிறுமி கா்ப்பமானது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினா் அளித்தப் புகாரின் பேரில், மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராசுவைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வி.ஆா். தனலட்சுமி முன்னிலையாகி வாதாடினாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட முதியவா் ராசுவுக்கு, 61 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.