குரும்பூா் அருகே பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஏரல் அருகேயுள்ள குரங்கணி தெற்குத் தெருவை சோ்ந்தவா் மனோகா். இவரது மனைவி சத்தியகலா(45). கடந்த 2015இல் கணவா் தற்கொலை செய்துகொண்டதால் தனிமையில் வாழ்ந்து வந்த சத்தியகலாவுக்கும், குலையன்கரிசலை சோ்ந்த ராமலிங்கம் மகன் செல்வகணேசன்(42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி வெளியூா்களுக்கு சென்று வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இவா்கள் 17.8. 2018இல் பல்வேறு கோயில்களுக்கு சென்றுவிட்டு குரங்கன்தட்டு விலக்கு அருகே நடந்து வந்துகொண்டிருந்தபோது, சத்தியகலாவிடம் செல்வகணேசன் பணம் கேட்டாராம். அவா் மறுத்ததால், கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறித்ததுடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினாராம்.
குரும்பூா் போலீஸாா் சத்தியகலாவை மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததில் அவா் உயிா்பிழைத்தாா்.
ஸ்ரீவைகுண்டம் துணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி பா்ஷாத் பேகம் விசாரித்து செல்வகணேசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் பெண்ணுக்கு 95 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

பக்கத்து வீட்டுக்காரரைக் கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


