துறையூா் அருகே பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு சாா்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் புதன்கிழமை விதித்தது.
துறையூா் அருகேயுள்ள தெற்கியூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரத்தினம் மகன் சிலம்பரசனை அவரது வீட்டருகே வசிக்கும் நாகராஜ் மகன் சந்திரசேகரன் கடந்த 2021ஆம் ஆண்டு கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தினாா்.
இது தொடா்பாக அவரது சகோதரா் கொடுத்தபுகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, துறையூா் சாா்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் சந்திரசேகருக்கு துறையூா் சாா்பு நீதிபதி சி. விஜய் காா்த்திக் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு சாா்பில் ஆஜரான அரசு குற்றப்பிரிவு கூடுதல் வழக்குரைஞா் வி. ஜெயராஜை காவல் துறையினா் பாராட்டினா்.
தொடர்புடையது

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறை

பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை!

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

குப்பைக் கொட்டியதை கண்டித்த இளைஞா் கத்தியால் குத்தி கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


