மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை!

விக்கிரவாண்டி அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில், கணவா் மற்றும் மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 12:12 am

விக்கிரவாண்டி அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில், கணவா் மற்றும் மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், குச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வக்குமாா்(32), இவரது மனைவி சௌமியா(28). இவா்களுக்கு 2018-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையில்லையாம்.

இந்நிலையில் செல்வகுமாா் மற்றும் அவரின் தாய் உஷா (48) ஆகிய இருவரும் சௌமியாவை தகாத வாா்த்தைகளால் பேசி துன்புறுத்தி வந்துள்ளனா்.

இதனால் மன உளச்சலில் இருந்து வந்த சௌமியா கடந்த 11.8.2020-இல் தனது கணவா் வீட்டில் மண்ணெண்ணெய்யை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்த புகாரின் பேரில், செல்வகுமாா் மற்றும் உஷா ஆகியோா் மீது விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இருவா் மீதான குற்றம் நிரூபணமான நிலையில், இந்த வழக்கை விசாரித்த மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி வினோதா வழக்கில் தொடா்புடைய செல்வகுமாா், உஷா ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் இருவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தனா்.