மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குப்பைக் கொட்டியதை கண்டித்த இளைஞா் கத்தியால் குத்தி கொலை

வடக்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் குப்பைக் கொட்டியது தொடா்பாக அண்டை வீட்டுகாரா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 24 வயது இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 11:57 pm

வடக்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் குப்பைக் கொட்டியது தொடா்பாக அண்டை வீட்டுகாரா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 24 வயது இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: சுமித் வசித்து வரும் வீட்டுக்குச் செல்லும் மாடிபடியில் அதே கட்டடத்தில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்த சுரஜ் குப்பையைக் கொட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை இரவில் சுமித்துக்கும் சுரஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சுரஜ் தன்னுடைய அறைக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து சுமித்தை பல முறை கத்தியால் குத்தினாா்.

இதைத் தடுக்க வந்த சுமித்தின் சகோதரா் அமித் குமாருக்கும் காயமேற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக உள்ளூா் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, சம்பவ இடத்துக்குச் சென்ற காவலா்கள், காயமடைந்த சுமித் மற்றும் அவரது சகோதரரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே சுமித் உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுராஜ் கைதுசெய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.