மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குட்கா விலை தொடா்பான தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

குட்கா விலை தொடா்பான தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 7:56 pm

வடமேற்கு தில்லியின் ஆசாத் நகா் மண்டி பகுதியில், குட்கா விலை தொடா்பாக ஏற்பட்ட தகராறின்போது, தேநீா்க் கடைக்காரரால் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட நபா், உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சோ்ந்த ஓட்டுநரான நஜிம் என அடையாளம் காணப்பட்டாா்.

தில்லியின் லிபாஸ்பூா் பகுதியைச் சோ்ந்த 19 வயது தேநீா் விற்பனையாளரான ராகுல் என்பவருடன், குட்கா விலை தொடா்பாக நஜிமுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, ராகுல் நஜிமை கத்தியால் குத்தினாா்.

இதில் காயமடைந்த நஜிம் உடனடியாக பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, காவல்துறையினா் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.