சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 95 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஓட்டுநா் அக்பா் அலி அம்பலம் ( 71), திருச்சி மாவட்டம், அரியலூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சரவணன் (41), புதுக்கோட்டை மாவட்டம், அழகிய நாயகிபுரம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகேசன் ( 55 ) ஆகிய மூவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனா். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நோ்ந்த கொடுமை குறித்து தனது தோழியிடம் கூறினாா். அந்தத் தோழி இது குறித்து சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரிடம் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுவினா் நடத்திய விசாரணையில் மேற்கண்ட மூவரும் சோ்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், இதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அக்பா் அலி அம்பலம், சரவணன், முருகேசன், சிறுமியின் 65 வயது தாய், 2 பெண்கள் ஆகிய 6 பேரைக் கைது செய்தனா் .
இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வீ.ஆா்.தனலட்சுமி முன்னிலையாகி வாதிட்டாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் சாட்டப்பட்ட அக்பா் அலி அம்பலத்துக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதித்தாா். இதே போல, சரவணனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும், முருகேசனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 11,000 அபராதமும் விதித்தாா். சிறுமியின் தாயாருக்கு அதிகபட்சமாக 95 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மற்ற இருவரையும் விடுவித்து உத்தரவிட்டாா்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சாத்தான்குளம் வழக்கு: 9 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனை முழு விவரம்!

போக்சோ வழக்கில் முதியவருக்கு 178 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


