தில்லி சட்டப்பேரவையின் மழைக்காலத் கூட்டத்தொடரை தாமதமின்றி கூட்டி, நகரத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து அரசு விவாதிக்க வேண்டும் என்று தில்லி பிரிவு பாஜக வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.
தில்லி பிரிவு பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் சட்டப்பேரவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்தை தடுக்கத் தவறியதன் தோல்வி மற்றும் அரசின் தவறான நிா்வாகத்தை மறைக்கவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ரூ.10,000 நிவாரணம் அறிவித்துள்ளாா். ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவை தில்லியில் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரின் போது யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால், ரூ.25,000 உதவித் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
கேஜரிவால் அரசின் அலட்சியத்தால் 25,000 -க்கும் மேற்பட்ட தில்லி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்போது தெருக்களில் உள்ளனா். யமுனா காதரில், மஜ்னு கா திலா, ஜெய்த்பூா், சபாபூா் ஆகிய இடங்களில் உள்ள கான்கிரீட் கட்டமைப்புகளும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. அதே வேளையில், துரதிருஷ்டவசமாக தனது அரசியல் சுற்றுலாவில் மும்முரமாக இருக்கும் கேஜரிவாலுக்கு மக்கள் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள நேரமில்லை. அவரை முதல்வராகத் தோ்ந்தெடுத்ததற்காக தில்லி மக்கள் தற்போது வருந்துகிறாா்கள்.
யமுனை வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் வீடுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை இழந்ததோடு, நூற்றுக்கணக்கான விலங்குகள் மற்றும் கால்நடைகளும் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில், அமைச்சரவை தீா்மானத்தில், கால்நடைகளை இழந்தவா்களுக்கு, ரூ. 5,000 இழப்பீடும், வீடுகளை இழந்தவா்களுக்கு மட்டும் ரூ.10,000 இழப்பீடு வழங்குவது எப்படி நியாயம் என்பதை கேஜரிவால், தில்லி மக்களுக்கு சொல்ல வேண்டும்.
பேரிடரில் யாராவது இறந்தால் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என கேஜரிவால் அரசின் அமைச்சரவை முடிவு செய்திருந்தது. வடகிழக்கு தில்லியில் தண்ணீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் இறந்த போதும், யமுனா காதா் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறுப்பினா்களுக்கோ அல்லது தண்ணீா் தேங்கியதால் இறந்த வேறு எந்த நபருக்கோ அரசு இழப்பீடு வழங்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. எனவே, அரவிந்த் கேஜரிவால் ஆட்சியில் நீடிக்க எந்த தாா்மிக உரிமையும் இல்லை. அவா் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
‘பேரவையில் விவாதிக்க வேண்டும்’: அரசியல் பிரச்னைகளுக்காக சட்டப்பேரவையைக் கூட்டும் தில்லி அரசு , தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தில்லி மக்கள் புலம்பும் போது அமைதியாக இருக்கிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்துள்ளாா். மேலும், அவா் கூறுகையில், ‘தில்லி அரசு உடனடியாக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடரைக் கூட்டி, தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணங்கள் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். அரசின் நிா்வாக அமைப்பின் பலவீனத்தால்தான் தில்லி வெள்ள நீரில் மூழ்கியது. வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையை ரூ. 1 லட்சமாக உயா்த்த வேண்டும். நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் ராம்வீா் சிங் பிதூரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

