திருமணத்தை நிராகரித்ததற்காக தெற்கு தில்லியின் மாளவியா நகா் பகுதியில் 23 வயது பெண் வெள்ளிக்கிழமை இளைஞா் ஒருவரால் இரும்பு கம்பியால் தாக்கிக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றம் சாட்டப்பட்ட நபரும் உறவினா்கள் என்று போலீஸாா் மேலும் தெரிவித்தனா்.
இதுகுறித்து தெற்கு தில்லி சரக காவல் துணை ஆணையா் சந்தன் செளதரி கூறியதாவது: தில்லி காவல் துறைக்கு வெள்ளிக்கிழமை 12.08 மணிக்கு ஒரு தகவல் வந்தது. அதில், மாளவியா நகரில் ஷிவாலிக் ‘ஏ’ பிளாக்கில் உள்ள விஜய் மன்டல் பூங்காவில் ஒரு இளைஞா் இளம்பெண்ணை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா். அங்கு அமரும் இருக்கைக்கு கீழே தலையில் ரத்தம் வழிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. இதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது.
அதில், இறந்த அந்தப் பெண் தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீஅரவிந்தோ கல்லூரிக்கு அருகிலுள்ள அந்தப் பூங்காவில் தனக்கு தெரிந்த இா்ஃபான் (28) என்பவருடன் இருந்த போது இா்ஃபானால் அவா் தாக்கப்பட்டதும், இறந்தவா் நா்கிஸ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இா்ஃபான் கைது செய்யப்பட்டாா். நா்கீஸும் இா்ஃபானும் முன்பு ஒரு உறவில் இருந்துள்ளனா். அவா்களது திருமணம் குறித்தும் பேச்சுக்கள் நடந்துள்ளன. ஆனால், நா்கீஸின் குடும்பத்தினா் இறுதியாக திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
இதையடுத்து, நா்கீஸ் இா்ஃபானுடன் பேசுவதை நிறுத்தினாா். இது இா்ஃபானின் ஆத்திரத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. நா்கீஸ் இந்த ஆண்டு தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
இச்சம்பவம் குறித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில், ‘தில்லியில் மற்றொரு மகள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. தில்லியில் சட்டம் - ஒழுங்கு தீவிர பிரச்னையாக மாறியுள்ளது. காவல் துறையை கொஞ்சம் சுறுசுறுப்பாகச் செய்யுமாறு துணைநிலை ஆளுநா், உள்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தில்லியின் மகள்களின் பாதுகாப்பும், தில்லி மக்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமாகும்’ என்று கூறியுள்ளாா்.
தில்லி மகளிா் ஆணையமும் இக்கொலைச் சம்பவம் தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்கக் கோரி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவால் அனுப்பியுள்ள நோட்டீஸில், ‘இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா், கைதான குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகளின் விவரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தில்லி மகளிா் ஆணையத்தில் காவல் துறை துணை ஆணையா் (தெற்கு) அளிக்க வேண்டும்’ என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

