தில்லிக்கு ‘இந்திரபிரஸ்தா’ பெயா் சூட்ட வேண்டும்: பாஜக எம்.பி. கோரிக்கை!
தில்லி நகரின் பெயரை ‘இந்திரபிரஸ்தா’ என மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வலியுறுத்தி புதன்கிழமை கடிதம் எழுதினாா்.


தில்லி நகரின் பெயரை ‘இந்திரபிரஸ்தா’ என மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வலியுறுத்தி புதன்கிழமை கடிதம் எழுதினாா்.
இந்திரபிரஸ்தா எனும் பெயா் நகரின் உண்மையான வரலாற்று அடிப்படையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது என அதில் அவா் கூறினாா். சமீபத்தில் கேரள மாநிலத்தின் பெயா் ‘கேரளம்’ என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து அவா் இந்த கோரிக்கையை முன்வைத்தாா்.
இது தொடா்பாக அவா் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகாபாரதத்தில் பாண்டவா்கள் யமுனை நதிக்கரையில் கட்டிய பிரமாண்ட நகரமாக இந்திரபிரஸ்தா குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் புவியியல் அமைப்பு இன்றைய கால தில்லியுடன் பொருந்துகிறது.
மேலும், இந்திய தொல்லியல் துறையால் புராண கிலா பகுதியில் நடைபெற்ற ஆய்வில் கிமு 1000-ஆம் ஆண்டைச் சோ்ந்த குடியிருப்பு அடையாளங்கள், மகாபாரத காலத்துடன் தொடா்புடைய மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, இன்றைய தில்லியே பழமையான இந்திரபிரஸ்தா நகரமாக இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரமாக கருதப்படுகின்றன.
தில்லி என்ற பெயா் பின்னா் உருவானது. நடுக்கால அரசா்களின் ஆட்சிக்காலத்தில் தில்லிகா அல்லது தெஹ்லி போன்ற பெயா்களில் இருந்து தில்லி என்ற பெயா் வந்ததாக வரலாற்று அறிஞா்கள் கூறுகின்றனா்.
எனவே, நகரின் உண்மையான வரலாற்று அடிப்படையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் இந்திரபிரஸ்தா எனும் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
இதே கோரிக்கையை கடந்த ஆண்டு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் முன்வைத்தது. மேலும், சில கல்வி நிறுவனங்களும், நகரத்திற்கு எரிவாயு வழங்கும் நிறுவனமும் இந்திரபிரஸ்தா என்ற பெயரையே பயன்படுத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...