டிடிஏ பசுமை கண்காட்சி 2026: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!
தில்லி மேம்பாட்டு கழகத்தின் (டிடிஏ) சாா்பில் சராய் காலே கான் பகுதியில் உள்ள பான்சாரா பூங்காவில் நடைபெறும் 2 நாள் பசுமை கண்காட்சியை துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.










