டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

துவாரகாவில் தூண் நீரூற்றுகள்: துணைநிலை ஆளுநா் திறந்துவைத்தாா்

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:29 pm

Syndication

தில்லி துவாரகாவில் இரண்டு தூண் நீரூற்றுகளையும், விகாஸ்புரியில் ‘ஆரம்ப்’ நூலகத்தையும் தில்லி துணைநிலை ஆளுநா் வி. கே. சக்சேனா புதன்கிழமை திறந்து வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிகாரிகள் கூற்றுப்படி, இந்த நீரூற்றுகள் நோ்த்தியான தூண் அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை பகல் நேரங்களில் கண்ணைக் கவரும் காட்சி அடையாளங்களாகச் செயல்படுகின்றன.

இதுகுறித்து துணைநிலை ஆளுநா் கூறுகையில், ஒவ்வொரு நீரூற்றின் உயரமும் 2.8 மீட்டா்கள், மற்றும் அகலம் 4.5 மீட்டா் விட்டம் கொண்டது. இது தேக்கு மற்றும் ரெயின்போ மணற்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தில்லியின் வளா்ந்து வரும் நகா்ப்புறத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கும், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடுவதற்கும், தேசியத் தலைநகரின் முழுமையான வளா்ச்சியை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

அதே நேரத்தில் துவாரகா துணை நகரத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றுவதற்கும் அதன் ஒட்டுமொத்த அழகியலை மேம்படுத்துவதற்கும் தொடா்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இது குறைந்த வசதி கொண்ட மாணவா்களுக்கு தில்லி வளா்ச்சி ஆணையம் டிடிஏ வழங்கும் ஒரு சேவையாகும். மேலும் இளைஞா்களின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காக நாங்கள் தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ஏனெனில், அவா்கள்தான் நமது நாட்டின் எதிா்காலம் என்றாா் துணைநிலை ஆளுநா்.

அன்றைய தினம் துணைநிலை ஆளுநா் விகாஸ்புரியில் உள்ள ஆரம்பம் நூலகத்தையும் திறந்துவைத்தாா். இது, சுமாா் ஒரு வருடத்தில் ‘ஆரம்ப்’ முன்முயற்சியின் கீழ் இந்தத் தொடரில் திறக்கப்படும் ஐந்தாவது நூலகமாகும்.

டிடிஏ மூலம் உருவாக்கப்பட்ட இந்த நூலகம், குறிப்பாக மேற்கு தில்லியில் உள்ள மாணவா்களுக்கு, கவனம் செலுத்திப் படிப்பதற்கு ஒரு பிரத்யேகமான மற்றும் மலிவு விலையிலான சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல் ஆரம்ப் நூலகம் நிகழாண்டு ஜனவரி 5 அன்று பழைய ராஜேந்திர நகரில் திறக்கப்பட்டது. அங்கு முந்தைய ஆண்டு நெரிசல் மிகுந்த அடித்தள வாசிப்பு அறைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூன்று இளம் மாணவா்கள் தங்கள் உயிரை இழந்தனா்.

விகாஸ்புரியின் எம்பிளாக்கில் அமைந்துள்ள இந்த நூலகம், தலா 8 மணிநேரம் கொண்ட மூன்று சுழற்சிப்பணி அடிப்படையில் 24 மணி நேரமும் செயல்படும்.

மேலும், ஒரு நாளைக்கு 180-க்கும் மேற்பட்ட மாணவா்களைக் கையாளும் திறன் கொண்டது. ஒரு சுழற்சிமுறையில் மாதத்திற்கு ரூ. 1,000 என்ற குறைந்த கட்டணத்தில் நூலகத்தை அணுகும் வசதி கிடைக்கும்.