மனித மனதுக்கு அமைதி தரக்கூடிய விஷயங்கள் பல. எனினும், இயற்கையின் தோழர்களாகப் போற்றப்படும் விலங்கு, பறவைகளைக் காணும்போது நம்மையும் அறியாமலேயே ஓர் ஆனந்த அமைதி மனத்தில் ஏற்படுவதுதான் விந்தை!
அதிலும் அரிதான, ஆக்ரோஷமான விலங்கு, பறவை இனங்களைப் பார்ப்பதே அலாதியானது. இதுபோன்ற உயினங்களை வனத்திற்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லை.
அதனால், இயற்கை பிணைந்த வனச்சூழலுடன் அமையப்பெறும் உயிரியல் பூங்காக்காக்கள் அக்குறையைப் போக்குகின்றன.
வன அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் தில்லியின் புராண
கிலா பகுதி தேசிய உயிரியல் பூங்கா விலங்கு, பறவைகளின் புகலிடமாக விளங்குகிறது.
சுமார் 280 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட, 50 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பூங்காவைப் புதுப்பொலிவு பெறச் செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
20 ஆண்டுக் காலத் திட்டத்தில் ரூ. 176 கோடி மதிப்பீட்டிலான "மாஸ்டர் பிளான்' மூலம் இத்தகைய பணிகள் நடைபெற்று வருகின்றன.
விலங்கு, பறவைகள் பராமரிக்கப்படும் இடங்கள், பார்வையாளர் கூடம், பூங்காச் சாலைகள், தண்ணீர் வசதி, வடிகால் வசதி, பாலம் என பலபல பணிகள் சப்தமின்றி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சுமார் 1,500 வன உயிரினங்கள் உள்ள இந்தப் பூங்காவில் விலங்குப் பிரிவு, கால்நடைப் பிரிவு, கல்விப் பிரிவு, பாதுகாப்பு பிரிவு, சுகாதாரப் பிரிவு, தோட்டக்கலைப் பிரிவு என 10 பிரிவுகள் செயல்படுகின்றன.
ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மதிப்பீடு செய்வதன் மூலம் தரம் மேம்படுத்தும் பணிகள் உரிய பரிந்துரைகளின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மாஸ்டர் பிளானை தயாரிக்கும் நடைமுறைகளை முடிப்பதற்கு மட்டும் ஓராண்டு ஆகியது. முன்னதாக, இத்திட்டத்திற்கான முன்மொழிவு மத்திய வனவிலங்கு பூங்காக்கள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, ஆணையத்தின் வடிவமைப்புக் குழு வல்லுநர்கள் கள ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி இந்த மாஸ்டர் பிளான் திட்டத்தை மத்திய வனவிலங்கு ஆணையம் அங்கீகரித்தது.
""இந்த மாஸ்டர் பிளான்படி புதிதாக பார்வையாளர் மையம் நவீனத் தரத்துடன் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் காலரி, செயல்பாட்டு மையம், கலையரங்கம் ஆகியவை கொண்டதாக இருக்கும்.
உணவு வளாகம், நூல்கள் அடங்கிய பிரிவு, ஏ.டி.எம். பொதுமக்களுக்கான கழிப்பிட, குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிட வசதி, புல்வெளி, டிக்கெட் வழங்குமிடம், பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை, சமான்கள் பாதுகாப்பு அறை ஆகியவை அமைக்கப்பட உள்ளன''
என்று தேசிய உயிரியல் பூங்காவின் இயக்குநர் அமிதாப் அக்னி ஹோத்ரி தெரிவித்தார்.
இதுகுறித்து "தினமணி' நிருபரிடம் அவர் மேலும் கூறியது:
தற்போது பூங்காவில் 105 வகையான 1,500 விலங்குகளும், பறவைகளும் உள்ளன. மாஸ்டர் பிளான்படி இந்த இனங்கள் 200 ஆகவும், எண்ணிக்கையை 2 ஆயிரமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
ஏற்கெனவே விலங்கு, பறவை வைக்கப்படும் 39 இடங்கள் தரம் மேம்படுத்தும் பணிகள் உள்ளன. தற்போது பறவை, வெள்ளைப்புலி பராமரிக்கப்படும் இடம் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து வேறு பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும், புதிதாக 30 இடங்களும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.
மேலும், பார்வையாளர்கள் விலங்குகளை எளிதாகப் பார்க்கும் வகையில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. தவிர, பலவிதமான பூச்சிகள், மீன்கள், வண்ணத்துப் பூச்சிகள் வைப்பதற்கான பூங்காவும், மழைக்காடும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
சாலை ஒருங்கிணைப்பு, தண்ணீர் சப்ளை, மேற்பரப்பு கழிவுநீர்ப்போக்கு, மின் விநியோகம், பார்வையாளர்களுக்குரிய கழிப்பிடம், பால் பொருள் விற்பனையகம், உணவகங்கள், தங்குமிடம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் இந்த மாஸ்டர் பிளானின் உள்ளடக்கம்.
இந்த மாஸ்டர் பிளானைச் செயல்படுத்த ரூ.176 கோடி மதிப்பிடப்பட்டு அதற்காக ஆண்டுதோறும் வனத் துறை அமைச்சகம் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகையும் பூங்காவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நீர்தேங்காமல் இருக்க நடவடிக்கை
பூங்காவில் மழைக்காலத்தின்போது தண்ணீர் தேங்குவது மிகவும் முக்கியப் பிரசனையாக இருந்து வந்தது. இதற்கு முக்கியத்துவம் அளித்து பிரச்னையைத் தீர்ப்பதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், 70 சதவீதம் வரை இப்பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. முழுமையாகத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மாதிரி பூங்கா
மாஸ்டர் பிளானைச் செயல்படுத்துவதன் மூலம் மாதிரி உயிரியல் பூங்கா என்ற பெயரைத் தேசிய அளவில் பெற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
இதற்காகவே, சர்வதேசத் தரத்தில் பூங்காவைத் தரம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


