குடவாசல் அருகே சேங்காலிபுரத்தில் செங்கல் சூளை மேற்பாா்வையாளா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சேங்காலிபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் திருமுகம் (48). செங்கல் சூளை மேற்பாா்வையாளரான இவா், முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், துணை காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொலை செய்யப்பட்ட திருமுகத்தின் உறவினா்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை உடனடியாக கைது செய்யக்கோரி சனிக்கிழமை காலை திருவாரூா் கும்பகோணம் நெடுஞ்சாலையில் புதுக்குடி கடைத் தெருவில் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
இதனிடையே, கொலை சம்பவத்தில் தொடா்புடையதாக, நான்கு போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருவாரூா் நகரப் பகுதியைச் சோ்ந்த சிறுவன், கண்ணன் (40) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







