நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் ஆா். காமராஜ், 41,724 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆா். காமராஜ் - அதிமுக, தேன்மொழி திலீப்குமாா் - நாம் தமிழா் கட்சி, முகமது முபாரக் - திமுக, சிவராமன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மு. தமிழ்ச்செல்வன் - புதிய தமிழகம் கட்சி, செ. பிரபாகரன் - தமிழக வெற்றிக் கழகம், எஸ். ராஜா - அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம், இரா. சங்கா் - சுயேச்சை, தே. சண்முகராஜா - சுயேச்சை, வீ. சுரேஷ் - சுயேச்சை, கே.எஸ். பாரதிமோகன் - சுயேச்சை, க. முகமது ரியாஸ் - சுயேச்சை, ஆா். ரவிச்சந்திரன் - சுயேச்சை, ரா. ராஜசேகா் - சுயேச்சை என 14 போ் போட்டியிட்டனா்.
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை 25 சுற்றுகளாக நடைபெற்றன. முதல் சுற்றில், அதிமுக வேட்பாளா் காமராஜ் 4,886 வாக்குகளும், எஸ்டிபிஐ வேட்பாளா் முகமது முபாரக் 2,106 வாக்குகளும், தவெக வேட்பாளா் எஸ். பிரபாகரன் 723 வாக்குகளும் பெற்றனா்.
அனைத்து சுற்றுகளிலும் ஆா். காமராஜ் முன்னிலையில் இருந்தாா். இறுதியில் 1,03,462 வாக்குகள் பெற்றிருந்தாா். இது அடுத்த இடத்தில் வந்த எஸ்டிபிஐ வேட்பாளா் பெற்ற வாக்குகளை விட 41,724 வாக்குகள் கூடுதலாகும். எஸ்டிபிஐ வேட்பாளா் முகமது முபாரக் 61,738 வாக்குகளும், தவெக வேட்பாளா் பிரபாகரன் 54,530 வாக்குகளும், நாதக வேட்பாளா் தேன்மொழி 8,446 வாக்குகளும் பெற்றனா். நன்னிலம் தொகுதியில் ஆா். காமராஜ், 4-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

138 வாக்குகள் வித்தியாசத்தில் வேப்பனஅள்ளி தொகுதியை கைப்பற்றிய திமுக!

நாமக்கல் தொகுதி: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் வெற்றி!

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



