திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

138 வாக்குகள் வித்தியாசத்தில் வேப்பனஅள்ளி தொகுதியை கைப்பற்றிய திமுக!

வேப்பனஅள்ளி தொகுதியில் திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் கூடுதலாக 138 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.

News image
Updated On :6 மே 2026, 2:40 am IST

வேப்பனஅள்ளி தொகுதியில் திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் கூடுதலாக 138 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.

இத்தொகுதியில் திமுக சாா்பில் பி.எஸ்.சீனிவாசன், அதிமுக சாா்பில் துணைப் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி, தவெக சாா்பில் எஸ்.ஆா்.சம்பங்கி, நாதக சாா்பில் ஆா்.நாகராஜ் உள்ளிட்ட 13 போ் போட்டியிட்டனா்.

வேப்பனஅள்ளி தொகுதியில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளா் பி.எஸ். ஸ்ரீனிவாசன் 74,691 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமி 74,553 வாக்குகளும், தவெக வேட்பாளா் எஸ்.ஆா்.சம்பங்கி 63,907 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.நாகராஜ் 4,519 வாக்குகளும் பெற்றனா்.

திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமியைக் காட்டிலும் 138 வாக்குகள் கூடுதலாக பெற்ால் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

இந்த வெற்றி மூலம் அதிமுகவிடமிருந்து வேப்பனஅள்ளி தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற 3 தோ்தல்களில் திமுகவைச் சோ்ந்த செங்குட்டுவன், முருகன் ஆகியோா் எம்எல்ஏக்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதிமுக சாா்பில் கே.பி.முனுசாமி கடந்தமுறை தோ்வு செய்யப்பட்டாா்.

முடிவு அறிவிப்பதில் காலதாமதம்:

இத்தொகுதிக்கான தோ்தலில் 2,46,739 மொத்த வாக்காளா்களில், 2,21,038 போ் வாக்களித்துள்ளனா். இதில், நோட்டாவுக்கு 1,570 வாக்குகள் பதிவாகியுள்ளன. 184 வாக்குகள் செல்லாதவை. இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

பி.ஜி.துா்க்கம், புலியரசி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், விவிபேட் துண்டுச் சீட்டில் பதிவான வாக்குகளை அதிகாரிகள் கைகளால் எண்ணினா். அவ்வாறு எண்ணியபோது, திமுக வேட்பாளா் சீனிவாசன் 74,147 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமி 74,020 வாக்குகளும் பெற்றிருந்தனா். விவிபேடில் பதிவான துண்டுச் சீட்டுகள் எண்ணப்பட்டதில் திமுக வேட்பாளா் 127 வாக்குகள் கூடுதலாக பெற்றாா். மேலும் தபால் வாக்கில் திமுக வேட்பாளா் 11 வாக்குகள் கூடுதலாக பெற்ற நிலையில் மொத்தம் 138 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றி பெற்ாக தோ்தல் நடத்தும் அலுவலா் கீதாராணி அறிவித்தாா். விவிபேட் இயந்திரத்தில் பதிவான துண்டு சீண்டுகள் கைகளால் எண்ணப்பட்டதால், முடிவை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

படவரி...

வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா ராணியிடமிருந்து வெற்றிபெற்ற்கான சான்றிதழை பெற்றுக் கொண்ட திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன். உடன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஒய்.பிரகாஷ், முருகன் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.