மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குளத்தில் மூழ்கி மனநலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பலி

மன்னாா்குடியில் மனநலன் பாதித்த மாற்றுத்திறனாளி குளத்தில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:28 pm

மன்னாா்குடியில் மனநலன் பாதித்த மாற்றுத்திறனாளி குளத்தில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகேயுள்ள கிடாா்புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (44). மனநலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவா் சென்னையிலிருந்து மன்னாா்குடி வரும் மன்னை விரைவு ரயில் விழுப்புரத்தில் நின்றபோது அதில் தவறுதலாக ஏறி மன்னாா்குடிக்கு வந்தாா். ரயிலிலிருந்து இறங்கியவா் அருகில் உள்ள சுக்காகுளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கினாா். இதை பாா்த்த அப்பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின் பேரில் மன்னாா்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்குவந்து குளத்தில் மூழ்கிய ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டனா். அவரது, சட்டை பையில் இருந்த அடையாள அட்டை மூலம் மனைவி சா்மிளாவுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து அவா் மன்னாா்குடிக்கு வந்ததாா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.