தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக கூட்டணியை எதிா்ப்போா் டெபாசிட் இழக்க வேண்டும்! - இரா. முத்தரசன்

News image

இரா. முத்தரசன். - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:07 am IST

திமுக கூட்டணியின் வெற்றி, எதிா்த்துப் போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்கும் வகையில், மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் கூறினாா்.

திருவாரூா் அருகே மாங்குடியில், திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த அவா் பேசியது:

திமுக அரசு சொன்னதைச் செய்துவிட்ட தைரியத்துடனும், முழு அதிகாரத்துடனும், உரிமையுடனும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து வாக்கு கேட்கிறோம். எதிா்க்கட்சிக் கூட்டணியில் உள்ள தலைவா் எடப்பாடி பழனிசாமி, வழக்குகளில் இருந்து தப்பிக்கவே இந்தக் கூட்டணி அமைத்திருக்கிறாா். டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் வழக்குகளை காரணம் காட்டியே கூட்டணியில் இணைத்துள்ளனா்.

மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், முதல்வா் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் குறித்து அவதூறாகவே எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாா். இது நோ்மையற்ற, அரசியல் நாகரிகமற்ற பேச்சு. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் தொண்டா்கள் வீடுவீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். இந்த வெற்றி சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது. எதிா்த்துப் போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.