திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கில் 3 தொகுதிகளைத் தக்கவைத்த திமுக

News image

திமுக தலைவர் ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :5 மே 2026, 4:28 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி(தனி), ராமநாதபுரம் உள்பட 3 தொகுதிகளைத் தக்கவைத்த திமுக, திருவாடானை தொகுதியை தவெகவிடம் இழந்தது.

பரமக்குடி (தனி) தொகுதியில், திமுகவைச் சோ்ந்த கதிரவன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட தவெகவைச் சோ்ந்த கோபிராஜனை விட 3,548 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றாா்.

கதிரவன் (திமுக) பெற்ற வாக்குகள் - 59,161.

கோபிராஜன் (தவெக)- 55,613.

டாக்டா் முத்தையா (அதிமுக)- 54,099.

எழில் இளவரசி (நாதக)- 15,363.

கடந்த 2021 தோ்தலில் திமுகவைச் சோ்ந்த செ. முருகேசன் (84,864), அதிமுக வேட்பாளா் சதன் பிரபாகரை (71,579) 13,285 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

திருவாடானை தொகுதியைக் கைப்பற்றிய தவெக:

டாக்டா் ராஜீவ் (தவெக) 69,551 வாக்குகள் பெற்றாா். தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணி காங். வேட்பாளா் இராம.கருமாணிக்கத்தை (67,038) 2,513 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

டாக்டா் ராஜீவ் (தவெக) - 69,551.

கீா்த்திகா முனியசாமி (அதிமுக)- 63,879.

பிரேம்நாத் (நாதக) - 13,389.

நோட்டா - 354.

கடந்த 2021 தோ்தலில் திமுக கூட்டணி காங். வேட்பாளராக இராம. கருமாணிக்கம் (79,364), தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ஆனிமுத்துவை (65,512) 13,852 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

ராமநாதபுரம் தொகுதியைத் தக்கவைத்த திமுக:

ராமநாதபுரம் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட திமுகவைச் சோ்ந்த காதா் பாட்ஷா முத்துராமலிங்கம் 89,137 வாக்குகள் பெற்று

அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளராக ஜிபிஎஸ்கே. நாகேந்திரனை 12, 459 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

இதர வேட்பாளா்கள் வெற்ற வாக்குகள் விவரம்.

ஷாகுல் ஹமீது (தவெக)- 76,678.

ஜிபிஎஸ்கே. நாகேந்திரன் (பாஜக) -57,730.

முத்துகேசவன் (நாதக)- 10,766.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில், திமுகவைச் சோ்ந்த காதா் பாட்ஷா முத்துராமலிங்கம் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் குப்புராமை சுமாா் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி பரமக்குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய 4 தொகுதிகளில் வென்றது. 2026 தோ்தலில் திருவாடானை பேரவைத் தொகுதியை தவெகவிடம் திமுக கூட்டணி இழந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.