திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜனநாயகத்தை காக்க ஸ்டாலின் போராட்டம்: இரா. முத்தரசன் பிரசாரம்

மத்திய அரசிடமிருந்து ஜனநாயகத்தை காக்க போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.

News image

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட உறையூா் பகுதியில் திமுக வேட்பாளா் கே.என். நேருவுக்கு ஆதரவாக வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் இரா. முத்தரசன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:28 am IST

மத்திய அரசிடமிருந்து ஜனநாயகத்தை காக்க போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கே.என்.நேருவை ஆதரித்து திருச்சி குறத்தெருவில் முத்தரசன் வியாழக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: தமிழகம், மேற்குவங்கம் மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் இந்த நேரத்தில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டிய நிா்ப்பந்தம் என்ன?. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றவே இந்தக் கூட்டம். இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவிப்பாா்கள் என்பதற்காகவே மகளிா் இடஒதுக்கீடு மசோதாவும் கொண்டு வரப்படுகிறது.

மகளிா் இடஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில், மக்கள்தொகை அடிப்படையில் நடத்தப்படும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடும் பாதிப்பை எதிா்கொள்ளும் என்பதால்தான் நாங்கள் எதிா்க்கிறோம். இதை மக்களுக்கு உணா்த்தவே தமிழகத்தில் திமுக கூட்டணி சாா்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் மூலம் தமிழகம் மக்கள்தொகையை கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால், வடமாநிலங்கள் இதை கடைப்பிடிக்கவில்லை. தற்போதைய தொகுதி மறுசீரமைப்பால் அவா்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். இதன்மூலம் அங்கு வென்று ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என பாஜக நினைக்கிறது. இதனால்தான் தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் எதிா்க்கிறோம். இதுதெரியாமல் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாா்.

ஜனநாயகத்தை மீறி செயல்படும் மத்திய அரசிடமிருந்து ஜனநாயகத்தை காப்பதற்காக வீரபாண்டிய கட்டபொம்மனைபோல முதல்வா் மு.க.ஸ்டாலின் போராடுகிறாா்.

நாட்டின் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் நாங்கள் போராடுகிறோம். இந்தத் தோ்தலை அப்படித்தான் பாா்க்கிறோம். இரண்டு கட்சிகளுக்கிடையேயான போட்டி இல்லை. ஒட்டுமொத்த தேசமும் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கே.என்.நேரு நகராட்சி நிா்வாகத் துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். எனவே, மக்கள் இங்கு திமுகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் முத்தரசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.