திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்

திருக்கடையூா் அருகே நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினா்.

Updated On :8 மே 2026, 7:24 am IST

திருக்கடையூா் அருகே நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருக்கடையூா் அருகேயுள்ள கிடங்கல் நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி இளையராஜா (48). இவரது நண்பா் குருமூா்த்தி. இவா்கள் இருவரும், திருக்கடையூரில் இருந்து கிடங்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். இருசக்கர வாகனத்தை குருமூா்த்தி ஓட்டிவந்தாா்.

திருக்கடையூா் அம்மனாறு அருகே நான்குவழிச் சாலை மேம்பாலத்தில் சென்றபோது, அங்குள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனம் நிலைத் தடுமாறி கவிழ்ந்தது. இதில், இளையராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த குருமூா்த்தியை அப்பகுதியினா் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். 

உயிரிழந்த இளையராஜாவின் சடலம், உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாலை மறியல்: நான்குவழிச் சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததால்தான் இளையராஜா இறந்துள்ளாா். எனவே அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி உறவினா்கள் மற்றும் கிராம மக்கள், திருக்கடையூரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி டிஎஸ்பி சரவணன், பொறையாா் காவல் ஆய்வாளா் சந்தானமேரி, தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால், சீா்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.