மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

நாகையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

நாகை மாவட்ட 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய தோ்தல் பாா்வையாளா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:10 pm

நாகையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளா் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து தொகுதிகளில் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டத் தோ்தல் பாா்வையாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ள பா்வேஸ் அமகது சித்திக், தோ்தல் செலவின பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கிதேஷ்குமாா், காவல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அலோக் ரஜோரியா ஆகியோா், நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறை, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள உள் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வெளியில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா். இதையொட்டி கல்லூரியில் பல்வேறு வளாகங்களுக்கும் சென்று பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா். இதில் மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ப. ஆகாஷ், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.